உலக அளவில் வைரலாகும் கிகி சேலஞ்சால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

"கிகி சேலஞ்ச்" என்றழைக்கப்படும் ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடும் விபரீத செயலை முயற்சி செய்த பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் ஒவ்வொரு சமயத்தில் ஏதேனும் ஒரு செயல் மிகவும் வைரலாக நெட்டிசன்களால் பரபரப்படுகிறது. அதனை மக்களும் ஏற்று செயல்படுத்தி வருகின்றனரா.

அந்த வகையில் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வரும் "கிகி சேலஞ்ச்" என்ற முறை பிரபலங்கள் துவங்கி, பொதுமக்கள் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஓடும் காரிலிருந்து வெளியில் இறங்கி, In My Feelings என்னும் பாடலிற்கு அந்த நபர் நடனமாட வேண்டும் எனபதுவே அந்த சேலஞ்ச்.

இந்த முறையினை அமெரிக்கவின் Iowa நகரத்தில் வசித்து வரும் Anna Worden (18) என்ற இளம்பெண் முயற்சி செய்துள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்த Anna-வின் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்துள்ளது. மண்டை ஓட்டில் ஏற்பட்ட காயத்தில் காது மற்றும் தலையிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியேற ஆரம்பித்தது.

இதனையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Anna தற்போது குணமடைந்து மெதுவாக மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்