அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட 4 பேர் பலி!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில், நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டு செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள குயின் ஆப் போரஃப் குடியிருப்பின் முதல் மாடியில், திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் 5வயது சிறுவன், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இதுதொடர்பான ஆதாரங்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த துப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் அந்நபர் கைது செய்யப்படுவார் என்றும் நியூயார்க் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்