எனக்கு இன்னும் 10 நாளில் கல்யாணம் இருக்கு! பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டேன்: கெஞ்சிய புதுமாப்பிள்ளை

Report Print Santhan in அமெரிக்கா

தனக்கு திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில், தன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக அமெரிக்காவில் இருக்கும் நபர் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கோரியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த தேவதா ரவி தேஜா என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் வரும் 13-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், என்னுடைய திருமணம் ஆகஸ்ட் 13-ஆம் திகதி நடக்கவிருக்கிறது.

என்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டேன், ஆகஸ்ட் 10-ஆம் திகதி நான் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும். தயவுசெய்து, நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு சுஸ்மா சுவராஜ், உங்கள் பாஸ்போர்ட்டை நீங்கள் தவறான நேரத்தில் தொலைத்துவிட்டீர்கள். திருமண நேரத்துக்குச் செல்ல கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன் என பதிலளித்துள்ளார்.

மேலும் அவர்,அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நவ்தேஜ் சர்னாவிடம் பாஸ்போர்ட்டை தொலைத்த தேவதா ரவி தேஜாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும்படி கூறியுள்ளார்.

இதற்காக சுஷ்மா ஸ்வராஜுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார் தேவதா ரவி தேஜா. சுஷ்மா ஸ்வராஜின் இந்த உடனடி நடவடிக்கைக்குப் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்