மகளின் வீடியோவால் வேலையை இழந்த ஆப்பிள் நிறுவன ஊழியர்

Report Print Kabilan in அமெரிக்கா
775Shares
775Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் தனது 'Iphone X' மொடலை சந்தையில் அறிமுகப்படுத்தாத நிலையில், அங்கு பணியாற்றும் பொறியாளரின் மகள் அதனை படம் பிடித்து யூடியுப்பில் வெளிட்டதால் அவரை பணிநீக்கம் செய்துள்ளது

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் தனது மகளை நிறுவனத்திற்குள் அனுமதித்ததோடு மட்டுமல்லாமல் புதிய மொடல் போனை படம் பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் வெளியிடப்படாத 'Iphone X' மொடலையும், நிறுவன வளாகத்தினையும் வீடியோவில் பதிவு செய்த அந்த பெண் அதனை யூடியூப்பில் பதிவேற்றினார்.

அந்த வீடியோ வைரலாகவே அதிர்ச்சியடைந்த ஆப்பிள் நிறுவனம் அந்த பொறியாளரை உடனடியாக வேலைநீக்கம் செய்தது. மேலும் யூடியூப் வலைதளத்தில் பதிவேற்றிய வீடியோவை நீக்க வேண்டும் என அவரின் மகளிடம் கேட்டுக்கொண்டது.

ஆனால் ஏற்கனவே அந்த வீடியோ வைரலானதால் ஒன்றும் செய்ய முடியாதநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பொறியாளரின் மகள் தனது தந்தை ஆப்பிள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறிவிட்டார் என்றும், அவர் எனக்கு ஆப்பிளின் புதிய மொடலை வழங்கியதால் அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

என்றும் விளக்கம் கூறி அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றிருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்