குடி போதையில் ரகளை: ஒரே குத்தில் மூர்ச்சையான நபர்

Report Print Santhan in அமெரிக்கா

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவரை பார் காவலாளி ஒருவர் கொடுத்த ஒரு பளார் வீடியோ தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அமெரிக்காவின் ஜான்சிட்டியில் உள்ள பிரபல பார் விடுதியில் இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் குடித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்த அவர் தன் அணிந்திருந்த சட்டையை கழற்றி, விடுதியின் காப்பாளர் அதாவது வாடிக்கையாளர்கள் வரும் போது கதவுகளை திறந்து விடுபவர்.

அவரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதில் அவரை தாக்குவதற்காக பல முறை முயன்றுள்ளார். இதைக் கண்ட அவரின் காதலி வேண்டாம் என்றும் திரும்பி வா என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரோ தன் காதலி பேச்சை கேட்காமல் தொடர்ந்து அவரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

பொறுமை காத்த காவலாளி அவர் அருகில் வந்தவுடன் ஒரு பன்ச் (ஒரு குத்து) கொடுத்தவுடன் அவர் சாலையில் கீழே விழுந்தார்.

அதன் பின்னர் அவரை அழுத்தி பிடித்து கதிகலங்க வைத்து விட்டார். சிறிது நேரம் கழித்து பார் காவலாளி அவரை விட்டவுடன், தன் காதலி உதவியுடன் வீடு திரும்பிச் சென்றார்.

இதைத்தொடர்ந்து அவ்விடுதியில் காவலாளியாக வேலை செய்பவர் MMA பைட்டர் என்றும், 5 முறை MMA பைட்டர் பட்டம் வென்றவர் என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவத்தை அவ்விடுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments