வெடிகுண்டு தாக்குதலை முறியடித்த வீடில்லா நபர்: கிடைத்த ஜாக்பாட் பரிசு

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க நாட்டில் வெடிகுண்டு தாக்குதலை முறியடித்த வீடில்லா நபர் ஒருவருக்கு தங்குவதற்கு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வேலையும் கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள எலிசபெத் நகரில் லீ பார்க்கர் என்ற நபர் தங்கி வருகிறார்.

லீ பார்க்கருக்கு வீடு இல்லாத காரணத்தினால் இவரது பொருட்களை ஒரு பையில் வைத்துக்கொண்டு ரயில் நிலைய மேடையில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பொருள் ஒன்று சந்தேகத்தை ஏற்படுத்த அதனை லீ பார்க்கர் பிரித்து பார்த்துள்ளார்.

அதற்குள் மின் கம்பிகள் இணைக்கப்பட்டு குழாய் வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த லீ பார்க்கர், சிறிதும் சிந்திக்காமல் பையை எடுத்துக்கொண்டு ஆளில்லாத இடத்திற்கு விரைந்துள்ளார்.

பின்னர், பையை அங்கேயே வைத்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த பொலிசார் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர்.

இதுமட்டுமில்லாமல், எலிசபெத் நகரை தொடர்ந்து Manhattan மற்றும் Seaside Park ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளையும் பொலிசார் அப்புறப்படுத்தினர்.

ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரை காப்பாற்றிய லீ பார்க்கர் மற்றும் அவரது நண்பருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த எலிசபெத் நகரை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் லீ பார்க்கருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இணையத்தளம் மூலமாக லீ பார்க்கர் மற்றும் அவரது நண்பருக்கு 10,000 டொலர் பெற்றுத்தர தீர்மானித்தார்.

ஆனால், எதிர்பார்த்ததை விட தற்போது 28,000 டொலருக்கு மேல் நிதியுதவி குவிந்து வருகிறது.

இதுமட்டுமில்லாமல், லீ பார்க்கர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தங்குவதற்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments