பொது இடத்தில் சிகரெட் பிடித்த ஒபாமாவின் மூத்த மகள்: வைரலாகும் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா, பொது இடத்தில் புகை பிடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவி உள்ளது.

குறித்த வீடியோவில், அமெரிக்காவில் நடைபெற்ற லோலபலோசா (Lollapalooza) இசை திருவிழாவிற்கு தனது தோழிகளுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா சென்றுள்ளார்.

அங்கு கூட்டத்தினருக்கு மத்தியில் நின்று கொண்டு, தனது உடலை வளைத்து, சற்று ஆபாசமான முறையில் நடனம் ஆடுகிறார்.

மேலும், தன்னுடைய தோழிகள் கையில் வைத்துள்ள ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்துக்கொண்டும், புகைப்படத்திற்கும் ஆபாசமான முறையில் போஸ் கொடுத்தும் கும்மாளமிட்டுள்ளார்.

அதே வீடியோவில் அவர் புகைபிடிக்கும் காட்சியும் இடம் பெற்று உள்ளன. அவர் MARIJUANA என்னும் ஒரு வகையான சிகரெட் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இதனை பார்த்த பலரும், பொது இடத்தில் வைத்து மாலியா, இப்படி ஒழுக்கமின்றி நடந்தகொண்டுள்ளாரே என விமர்சனம் செய்து உள்ளனர்.

வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments