சிங்கத்தின் வாயில் இருந்து தப்பிய குழந்தை

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி உரையாடலின் போது சிங்கம் குழந்தையை கடிக்க முயன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் மெக்சியன் புரோகிராம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சிங்கத்துடன் ஒரு உதவியாளர் அமர்ந்திருந்தார்.

அதில் தொலைக்காட்சி தொகுப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தாயின் குழந்தையிடம், சாதாரணமாக இருந்த சிங்கம் திடீரென்று குழந்தையின் ஷு மற்றும் காலின் சதை பகுதியை கடிக்க முயன்றுள்ளது.

இதை முதலில் கண்ட அவரது தொகுப்பாளர் மற்றும் அம்மா சிறிது பதட்டப்பட்டாலும், சிங்கத்தின் உதவியாளர் அதை நேர்த்தியாக கையாண்டு கூப்பிட்டு சென்றவுடன் புன்னகைத்தார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.

மேலும் இந்த வீடியோ 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது, தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments