ஹிலாரி கிளிண்டனை சுட்டுக் கொல்ல வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வரும் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனல் பறக்க நடந்து வருகிறது.

ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுள்ளார்.

அப்போது, ஒருவேளை ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று குடிமக்கள் அனைவரும் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டத்தை அவர் நீக்க முயற்சித்தால், ஹிலாரியை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரை சுட்டுக்கொல்வது தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் இப்பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

அமெரிக்க அரசியல்வாதியும் செனட்டருமான எலிசபெத் வாரன் தனது டுவிட்டர் பக்கதில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அதில், ஹிலாரி கிளிண்டனுக்கு டொனால்ட் ட்ரம்ப் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஏனெனில், ஒரு பெண்ணிடம் போட்டியிட்டு தேர்தலில் தோல்வி அடைவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு கோழை தான் டொனால்ட் டிரம்ப் என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments