தீவிரவாதத்தை அழிக்க இணையவேண்டும்: ஒபாமாவை தொலைபேசியில் அழைத்துபேசிய புடின்

Report Print Our Reporter Our Reporter in அமெரிக்கா
தீவிரவாதத்தை அழிக்க இணையவேண்டும்: ஒபாமாவை தொலைபேசியில் அழைத்துபேசிய புடின்

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இணைந்துசெயல்படுவோம் என்று ஒபாமாவை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு புடின் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பல ஆண்டு காலமாகவே பனிப்போர் இருந்துவருவதாக கூறப்படுகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படையுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்திவந்தது. இதையடுத்து ரஷ்யாவும் இந்த தாக்குதலில் இறங்கியது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ஞாயிற்றுகிழமை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடின் ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலில் இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சகங்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு நிலைகள் தேவையில்லை எனவும் ஒருங்கிணைந்த தீவிரவாத தடுப்பு அமைப்பை உருவாக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக ரஷ்ய அரசின் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

மேலும் இருநாட்டு தலைவர்களும் சிரியாவில் மேற்கொள்ளவேண்டிய மனிதாபிமான அனுகல்களின் அவசியம் குறித்தும் விவாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிரியாவில் அரசுக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்படி ஒபாமா புடினிடன் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உரையாடலின் போது உக்ரைன் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments