இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்... மிகுந்த வேதனையுடன் பிரித்தானிய அரச குடும்பம் வெளியிட்ட அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக பிரித்தானியா அரச குடும்பத்தினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா மகாராணி கடந்த வாரம் அதாவது ஈஸ்டர் தினத்தில்(ஏப்ரல் 21) தன்னுடைய 93-வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.

அன்றைய தினம் தான் இலங்கையின் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகளால் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் ஏராளமானோர் தங்களுடைய உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்தவுடனே கடந்த 22-ஆம் திகதி பிரித்தானியா மகாராணி எலிசபெத் மற்றும் அரசர் பிலிப் இது குறிக்கை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், நேற்று இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையடைந்தோம். இதனால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.

காயத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் விரைவில் திரும்ப வேண்டும், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இலங்கைக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இளவரசி வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் நடந்த இந்த மோசமான தாக்குதலினால் மிகுந்த கவலையில் உள்ளோம்.

மக்கள் பாதுகாப்பானவை என்று நினைக்கும் போது தான் அந்த இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. ஏராளமானோர் தங்கள் உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இலங்கைக்கு இது சோகமான நேரம், பிரார்த்திக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...