யூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

இளவரசி மேகன் மெர்க்கல் மற்றொரு இளவரசியான யூஜின் திருமணத்திற்கு வந்திருந்த போது அவர் கையில் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ராணி எலிசெபத்தின் பேத்தியான யூஜினுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த திருமணத்திற்கு அரச குடும்பத்தினர் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் பாடகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இவர்களது திருமணத்தைக் காண தேவாலயத்தின் வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

இந்நிலையில் இந்த திருமணத்திற்கு நேவி நிற கோட் அணிந்து மிகவும் அழகாக மேகன் மெர்க்கல் தன் கணவர் ஹரியுடன் வந்திருந்தார். அப்போது அவர் தன் கையில் தங்கம் மற்றும் வைர மோதிரங்களை அணிந்து வந்திருந்தார்.

அதன் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், அவர் அணிந்து வந்திருந்த நகை மற்றும் வைரத்தின் மதிப்பு £5,960 பவுண்ட் ஆகும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதைக் கண்ட வடிவமைப்பாளரான Pippa Small தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் யூஜின் திருமணத்திற்கு வந்த மெர்க்கல் இப்படி தாங்கள் வடிவமைத்த மோதிரம் மற்றும் பிரேஷ்லட் போன்றவைகளை அணிந்து வந்திருந்ததை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் கையில் அணிந்திருந்த பிரேஷ்லட் 18 கேரட் தங்கத்தால் ஆனது எனவும் அதன் மதிப்பு 1,720 பவுண்ட் எனவும், விரல்களில் அணிந்திருந்த மோதிரங்களின் மொத்த மதிப்பு 3,720 பவுண்ட் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நடுவிரலில் அவர் அணிந்திருந்த மோதிரத்தின் மதிப்பு மட்டும் தனியாக 1,368 பவுண்ட் எனவும் கூறப்பட்டுள்ளது. அவர் காதில் அணிந்திருந்த தோடு 520 பவுண்ட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers