லண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண்! கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி

Report Print Santhan in பிரித்தானியா
2753Shares

பிரித்தானியாவின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளம் பெண் ஒருவ முகக்கவசம் அணிய மறுத்ததோடு, காசாளர் முகத்தில் எச்சில் துப்பிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக முகக்கவசம் என்பது அனைவருக்கும் முக்கியம், முகக்கவசம் மூலம் கொரோனா பரவலில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

உலகசுகாதார நிறுவனம் கூட, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை அடிக்கடி கூறி வருகிறது.

இந்நிலையில் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில், சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்ற பெண் ஒருவர் தேவையானதை வாங்கிவிட்டு, காசாளரிடம் சென்றுள்ளார். அப்போது அவர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காசாளர் முகக்கவசம் அணியும் படி கூறி, பணத்திற்கான கார்டை வாங்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், என்னுடைய கார்டில் பணம் இருக்கிறது, அப்புறம் ஏன் மறுக்கிறீர்கள் என்று ஆதங்கமாக கத்துகிறார்.

ஆனால், காசாளர் முகக்கவசம் அணிவதைப் பற்றி கூற, ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பெண், அவர் மீது எச்சிலை துப்பிவிடுகிறார். கொரோனா தும்மல், எச்சில் போன்றவைகள் மூலம் எளிதாக ஒருவருக்கும் பரவி வரும் நிலையில், இந்த பெண் இப்படி செய்தது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பலருக்கும் அதிர்ச்சியடைய வைத்தது.

இறுதியில் அப்பெண் கடையை விட்டு வெளியேறும் போது அங்கிருந்த கிறிஸ்துமஸ் மரங்களை எட்டி உதைத்து செல்கிறார்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You May Like This Video

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்