இங்கிலாந்தில் தேசிய முடக்கம் எப்போது முடிவுக்கு வரும்?: அதன் பின் அமுலுக்கு வரும் கடும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
450Shares

இங்கிலாந்தில் தேசிய முடக்கம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முடிவுக்கு வர இருக்கிறது.

ஆனாலும், அதற்குப்பின்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார்.

குளிர்காலத்தில் கொரோனாவின் நிலைமை மோசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்பை விட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் எந்தெந்த பகுதியில் எந்த அளவுக்கு கொரோனா பரவல் உள்ளது என்பதைப் பொருத்து, அந்தந்த பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இது தொடர்பான விவரங்கள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியிடப்பட உள்ளன.

தேசிய முடக்கம் முடிவுக்கு வந்ததும், இங்கிலாந்து முழுவதும் அத்தியாவசியமற்றவை என்ற வகைப்படுத்தப்பட்டுள்ள கடைகளும் திறக்கப்பட உள்ளன.

உடற்பயிற்சிக் கூடங்கள், முடி திருத்தும் கடைகள் முதலானவை திறக்கப்பட உள்ளன. மளிகை மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்குவது தவிர்த்து வேறெதற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற கட்டுப்பாடும் டிசம்பர் 2ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

Image: Getty Images

முதல் அடுக்கில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வெளியேயும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் வரை கூடலாம்.

2 மற்றும் 3ஆம் அடுக்கிலுள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூட அனுமதி இல்லை என்றாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் இந்த விதி தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களை குஷிப்படுத்தும் விதத்தில், குறிப்பிட்ட இடங்களில் மதுபான விடுதிகள் திறக்கப்பட உள்ளன, ஆனால், அதீத அபாய பகுதிகளில் அல்ல... உள்ளூர் கட்டுப்பாடுகளுடன் ஆராதனை, திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

Image: Getty Images

நாட்டின் பகுதி எந்த அடுக்கில் உள்ளது என்பதன் அடிப்படையில், விளையாட்டு திடல்களில் மக்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை முடிவு செய்யப்படும். எல்லாவற்றிற்கும் மேல், எந்த அடுக்கில் வாழ்பவர்களானாலும், கட்டாயம் முகக்கவசம் அணிந்தே ஆகவேண்டும்.

வீடியோவை காண

Image: Getty Images

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்