பிரித்தானியாவில் இயல்பு வாழ்க்கை இதற்கு பின் திரும்பலாம்! சுகாதார அமைச்சர் சொன்ன தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
412Shares

பிரித்தானியாவில் இயல்பு நிலை ஈஸ்டருக்கு பின் திரும்பலாம் என்று நம்புவதாக சுகாதார அமைச்சர் மாட்ன் ஹாக் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால், வரும் 2-ஆம் திகதி முதல் பொதுமுடக்கத்தை பிரித்தானிய பிரதமர் போரிஸ்ஜோன்சன் அமுல்படுத்தினார்.

ஆனால், வரும் 2-ஆம் திகதிக்கு பின் பொதுமுடக்கத்தை முடிவு கொண்டு வர பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும், ஜிம்கள்,சிகையலங்கார தேவைகள் மற்றும் அழகுகலை நிலையங்கள் போன்றவை திறக்கப்படலாம் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் மாட்ன் ஹாக். பிரித்தானியாவில் ஈஸ்டர் கழித்து இயல்பு வாழ்க்கை வரத்துவங்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 90 சதவீதம் வரை செயல்திறன் கொண்டது என்ற செய்தி வெளியான நிலையில்,

பெரும்பான்மையான மக்களுக்கு வசந்த காலத்தில் தடுப்பூசி போடப்படும், அதாவது ஈஸ்டருக்கு பின் விஷயங்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியில் 100 மில்லியன் டோஸை அரசாங்கம் முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளது, இது பைசர் மற்றும் மாடர்னாவால் தயாரிக்கப்பட்டவைகளை காட்டிலும் மிகவும் மலிவானது மற்றும் சேமிக்க எளிதானது என்று தெரிவித்துள்ளார்.

20,000 பேரின் சோதனையின் அடிப்படையில், இது 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என்று காட்டப்பட்டுள்ளது.

தடுப்பூசி உறுதியானது, பாதுகாப்பானது என்பதை உறுதிபடுத்திய பின்னர், அதற்கான ஒப்புதல் பெற்று,

அந்த ஒப்புதலுக்கு உட்பட்டு, அடுத்த மாதம் தடுப்பூசி போட ஆரம்பிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்