பெண்கள் மட்டுமே இலக்கு: பிரித்தானியாவை நடுங்க வைத்த கொலைகாரன் கொரோனாவால் மரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
786Shares

வடக்கு இங்கிலாந்து மக்களை நடு நடுங்க வைத்த, பத்திரிகைகளால் யார்க்ஷயர் ரிப்பர் என எழுதப்பட்ட கொலைகாரன் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து பத்திரிகைகளால் யார்க்ஷயர் ரிப்பர் என எழுதப்பட்ட Peter William Sutcliffe, 1975 முதல் 1980 வரையான காலகட்டத்தில் சுமார் 13 பெண்களை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இவரது கொலைவெறித் தாக்குதலில் இருந்து 7 பெண்கள் உயிர் தப்பியதுடன், சிலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரின் தொடர் நடவடிக்கைகளுக்கு முடிவில் 1981 ஆம் ஆண்டு Sutcliffe கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

தற்போது 74 வயதாகும் Peter William Sutcliffe கொரோனா பெருந்தொற்றில் சிக்கி மரணமடைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவரது நுரையீரல் செயலிழந்து போகும் வரை அவர் தனது கடைசி நிமிடங்களை தனியாகக் கழித்தார் எனவும், சிகிச்சையை மறுத்துவிட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Sutcliffe கொலை செய்த பெண்மணி ஒருவரின் மகன் இந்த விவகாரம் தொடர்பில், கொரோனா வைரஸ் குறைந்தபட்சம் ஒரு மகிழ்ச்சியான முடிவுக்கு வழிவகுக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், Sutcliffe-ன் முதல் இரையான பெண்மணியின் மகன், இத்தகவல் தமக்கு மன நிம்மதியை தருவதாக குறிப்பிட்டுள்ளதுடன், இன்றைய நாள் தமக்கு சிறப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்