போரிஸ் ஜான்சன் ஓராண்டு கூட பிரதமராக நீடிக்கமாட்டார்?: ஒருவர் பின் ஒருவராக வெளியேறும் பிரதமர் இல்ல உதவியாளர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
313Shares

பிரித்தானிய பிரதமர் இல்லம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் ஓராண்டு கூட பிரதமராக நீடிக்கமாட்டார் என்ற கருத்து உருவாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் சர்வ குழப்பம் நிலவுவதாகவும், பிரதமரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளதாகவும் முதலில் செய்தி வெளியானது.

இந்த பிரச்சினைகளின் பின்னால் இருப்பவர் பிரதமரின் காதலியான கேரி சைமண்ட்ஸ்! பிரதமர் இல்லத்தில் கேரி அணி என்று ஒன்றும் Dominic Cummings அணி என்று ஒன்றும் உள்ளனவாம். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் நீண்ட கால உதவியாளராக இருந்தவர், Dominic Cummings அணியைச் சேர்ந்த Lee Cain.

இந்த வாரம் அவருக்கு பெரிய பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதையும் மீறி, அவர் திடீரென ராஜினாமா செய்தார்.

இதற்கு காரணம் என்னவென்றால், பிரதமரின் காதலி கேரியின் எச்சரிக்கையையும் மீறி Lee Cainஐ பதவியில் அமர்த்தினார் பிரதமரின் ஆலோசகரான Dominic Cummings.

ஆனால், அது பிடிக்காத கேரி, பிரதமரின் ஆலோசகர்களால் பிரதமருக்கு சரியான ஆலோசனை அளிக்கப்படவில்லை என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்தார்.

அத்துடன், ஊடக செயலரான Allegra Stratton என்பவருக்கும் மூத்த உதவியாளரான Munira Mirza என்பவருக்கும் Lee Cainஐ பதவியிலமர்த்தியது பிடிக்கவில்லையாம்.

ஆகவே, Allegra Stratton, தான் Lee Cainஇடம் வேலை செய்ய முடியாது, எதுவானாலும் நேரடியாக பிரதமரிடம்தான் பேசுவேன், அதற்கு சம்மதித்தால் மட்டுமே வேலை செய்வேன் என்று கோர, அதன்படி அவரை அனுமதித்துள்ளார் கேரி.

இது தன்னை அவமதிக்கும் செயல் என்பது போல் உணர்ந்துள்ளார் Lee Cain. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இனியும் பிரதமரின் காதலியுடன் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு நிம்மதியை இழக்கமுடியாது என்று முடிவு செய்த Lee Cain, ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார்.

இதற்கு அடுத்தபடியாக, Cummingsம் பிரதமர் இல்லத்திலிருந்து கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், Cummingsக்கு நெருக்கமான முக்கிய உதவியாளர்களும் தொடர்ந்து வெளியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், இந்த பிரச்சினைகளால், போரிஸ் ஜான்சன் நீண்ட காலம் பிரதமர் பதவியில் நீடிக்கமாட்டார் என்ற ஒரு கருத்து உருவாகியுள்ளது.

அடுத்த தேர்தலில் ஜான்சன் போட்டியிடுவாரா என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கேட்டபோது, நிச்சயம் இல்லை என்று பதிலளித்துள்ளார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்