பிரித்தானியாவில், சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடிக்க, காரை நிறுத்தி அதிலிருந்து வெளியேறினார் ஒரு இளம்பெண். அந்த பெண்ணின் பெயர் Azra Kemal (24).
உதவி கோரி வாகனங்களை அழைக்க சாலையின் நடுவிலுள்ள தடுப்பைத் தாண்டி மறுபக்கம் போக முயற்சி செய்துள்ளார் Azra. ஆனால், அது சாலையின் நடுவிலுள்ள தடுப்புச் சுவர் அல்ல, சாலையின் ஓரம் உள்ள தடுப்புச் சுவர். அத்துடன் Azraவின் கார் தீப்பற்றிய இடம் Kent பகுதியில் உள்ள Tonbridge என்ற இடத்திலுள்ள ஒரு பாலம்.
ஆக, பாலத்தின் மேலிருந்து, 30 அடி பள்ளத்தில் விழுந்து, எலும்புகள் நொறுங்கி அகால மரணமடைந்தார் Azra.
உண்மையில் இந்த சம்பவம் நடந்தபோது, இவ்வளவு தகவல்கள்தான் வெளியாகின. ஆனால், இப்போது விசாரணையில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாவது சட்டக்கல்லூரி மாணவியான Azra, காரில் தனியாக பயணிக்கவில்லை, Omar Allen என்ற ஆண் நண்பருடன் அவர் பயணித்துள்ளார். மேலும் அவர் நன்றாக குடித்திருக்கிறார்.
மேலும் குடிக்க பணம் கேட்டபோது, Omar பணம் இல்லை என்று கூற, அவரிடம் கோபப்பட்டுள்ளார் Azra. Omar வீட்டில் இரவு தங்குவதற்காக இருவரும் செல்ல, அங்கு இவர்கள் செய்த அட்டகாசத்தில் அலங்கார மின்விளக்கு ஒன்று உடைய, Omarஇன் அம்மா, இங்கே தங்கக்கூடாது என இருவரையும் துரத்த, லண்டனில் Azra தங்கியிருக்கும் வீட்டுக்கு இருவருமாக புறப்பட்டிருக்கிறார்கள்.
வழியில் பணியில் இல்லாத ஒரு பொலிசார், Azra குடித்திருப்பதைப் பார்த்திருக்கிறார், அவரை சோதனை செய்ய விரும்புவதாக கூறும்போது, காரை எடுத்துக்கொண்டு மணிக்கு 100 மைல் வேகத்தை விட அதிக வேகத்தில் காரை செலுத்தியிருக்கிறார் Azra, அதன் பின்தான் கார் தீப்பற்றியிருக்கிறது, இது குறித்து அந்த பொலிசார் சாட்சியமும் அளித்துள்ளார்.
இந்த எல்லா குழப்பத்துக்கும் பிறகுதான் எது சாலை, எங்கிருக்கிறோம், எது தடுப்புச்சுவர், எது பள்ளம் என எதையும் பிரித்தறிய முடியாத Azra, இருட்டில் பாலத்திலிருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்து, எலும்புகள் நொறுங்கி உயிரிழந்திருக்கிறார்.
இதற்கிடையில், நேற்று விசாரணையின்போது இந்த தகவல்களை தெரிவித்துள்ளார் Azraவின் நண்பரான Omar.
Azra பள்ளத்தில் விழுந்ததும், தானும் மரம் ஒன்றைப் பிடித்து பள்ளத்தில் இறங்கி Azraவுக்கு உதவமுயன்றுள்ளார் Omar. அப்போது, அவரும் தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார், அதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
நான் Azraவைக் காப்பாற்ற என்னாலான முயற்சிகளை மேற்கொண்டேன், நான் உதவவில்லை என Azraவின் தாய் நினைத்துக்கொள்ளக்கூடாது, இதை நான் Azraவின் தாய்க்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார் Omar.