பற்றியெரிந்த வீட்டுக்குள் சிக்கிய குழந்தைகள் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
329Shares

பிரித்தானியாவில் ஐந்து குழந்தைகளுடன் பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்த வீடு ஒன்று தீப்பிடித்ததில், நான்கு குழந்தைகள் பலியானார்கள்.

Staffordshireஇல் உள்ள தங்கள் வீட்டின் படுக்கையறையில் Riley John Holt(8), Keegan Jonathan Unitt (6), Tilly Rose Unitt (4), மற்றும் Olly Unitt (3) என்னும் அந்த நான்கு குழந்தைகளும் இறந்து கிடந்தார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தாயான Natalie Unitt (26) மற்றும் அவரது காதலரான Chris Moulton (30) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர். வீட்டிலுள்ள பாய்லர்தான் தீப்பற்றக்காரணம் என Moulton கூறியிருந்தார்.

ஆனால், நீதித்துறை அதிகாரிகள் விசாரணையில், வேறொரு அதிரவைக்கும் உண்மை தெரியவந்தது. அதாவது, Moultonம் Natalieயும் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், அதுவும் இருவரும் வீட்டுக்குள்ளேயே புகைப்பிடிப்பவர்கள்.

அப்படி வீட்டுக்குள் அவர்கள் புகைப்பிடித்ததற்காக, ஏற்கனவே அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆக, இரவில் வீட்டுக்குள் அவர்கள் புகை பிடித்துவிட்டு சரியாக அணைக்காமல் போட்ட சிகரெட் துண்டு ஒன்றுதான் தீப்பிடிக்க காரணமாக அமைந்துள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு ஆதாரமாக, எரிந்துபோன ஒரு மெத்தையின்கீழ், ஒரு ஆஷ் ட்ரேயும், சிகரெட் துண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வீடு தீப்பிடித்தது தெரியவந்ததும் உறங்கிக்கொண்டிருந்த Moulton, ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியேறியிருக்கிறார். Natalie முன் பக்க கதவு வழியாக வெளியேறி தப்பியிருக்கிறார்.

குழந்தைகள் நான்கு பேர் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறார்கள். என்றாலும், பெற்றோர்தான் பிள்ளைகளின் உயிரிழப்புக்கு காரணம் என்பதற்கு போதுமான ஆதாரம் கிடைக்கததால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்