ஆதரவற்ற நபருக்காக கணவரை விட்டுப் பிரிந்த பிரித்தானிய தாயார்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஆதரவற்ற நபருக்காக கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து சென்ற தாயார் ஒருவர் திடீரென்று மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த 37 வயதான லூயிஸ் மோர்கோம்பே என்பவர் டெபென்ஹாம்ஸ் கார் பார்க் அமைந்துள்ள மூன்றாவது மாடியில் தங்கியிருந்த 41 வயதான ஸ்டூவர்ட் ஜோனாஸ் என்பவரை தெற்செயலாக சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பானது நான்கு பிள்ளைகளின் தாயாரான லூயிசை ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது.

தொடர்ந்து ஸ்விண்டன் நகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்காக ஒரு சிறு அமைப்பை தொடங்கி அவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார் லூயிஸ்.

2017-ல் நடந்த இச்சம்பவத்தை அடுத்து நாளடைவில் ஸ்டூவர்ட்டுடன் லூயிசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கணவரிடம் இருந்து பிரிந்து சென்ற லூயிஸ் பின்னர் ஸ்டூவர்ட்டுக்கு உதவும் நோக்கில் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகல் லூயிஸ் திடீரென்று மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசர உதவிக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் வந்து முதலுதவி அளித்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அருமையான ஒரு பெண்மணியை இழந்து விட்டேன் என ஸ்டூவர்ட் கண்கலங்கியுள்ளார்.

வாழ்க்கையில் இதுபோன்ற குணம் கொண்டவர்களை சந்திப்பது அரிது என கூறிய ஸ்டூவர்ட், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

இதுவரை தெருவில் வாழ்ந்து வந்த தம்மை அவள் கண்டுபிடித்தாள், எனக்கு உதவினாள், என்னை ஆதரித்தாள், என்னை இந்த தெருவுகளில் இருந்து காப்பாற்றினாள் என ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்