லண்டன் வீட்டிலிருந்து கிளம்பி வெளியில் சென்ற இளம் பெண் குறித்து புகைப்படத்துடன் பொலிசார் முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் வீட்டில் இருந்து கிளம்பி வெளியில் சென்ற 17 வயது பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டு முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு லண்டனின் Barnet-ஐ சேர்ந்தவர் அலிஷா ரந்தவா (17).

இவர் தனது வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து பொலிசார் இது தொடர்பில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

அலிஷாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், வடக்கு லண்டன் மக்கள் அவர் குறித்து நினைவில் வைத்து கொண்டு தங்களுக்கு தெரிந்த தகவலை தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அலிஷா எந்த நாளில் இருந்து காணாமல் போனார் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இதோடு அவர் கடைசியாக அணிந்திருந்த உடைகள் குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் அலிஷாவின் தெளிவான புகைப்படம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்