கொரோனாவால் அதிகமான மக்கள் உயிரிழந்த போதிலும் திருந்தாத பிரித்தானியர்கள்!

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவில் கொரோனாவால் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். ஆனால் அங்கு இன்னும் மக்கள் முகக்கவசங்ளை அணியாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் பிரித்தானியா இருந்தபோதிலும் இவை தொடர்கிறது.

கொரோனா வைரஸால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை பிரேசில் மற்றும் அமெரிக்காவிற்கு பின்னால் மூன்றாவது இடத்தில் பிரித்தானியா உள்ளது, கிட்டத்தட்ட 45,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக இறப்புகளைக் கொண்ட மூன்று நாடுகளிலும் முகக்கவசம் அணியாத மக்கள் அதிகமாக உள்ளனர்.

இப்போது கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான ஆதாரங்கள் அதிகரிப்பதை ​​உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்துவதால், மூத்த விஞ்ஞானிகள் முகக்கவம் அணிவதை தீவிரமாக கருத்தில் கொள்ளுமமாறு பிரித்தானியர்களை வலியுறுத்துகின்றனர்.

முகக்கவசம் அணிவதில் பிரித்தானியா பல நாடுகளுக்கு பின்னால் உள்ளது என்று பிரித்தானியாவில்ன தேசிய அறிவியல் அகாடமியின் தலைவர் வெங்கி ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமல் இருப்பது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற சமூக விரோதமாக கருதப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவது மற்றவர்களைப் பாதுகாக்க உதவும், மேலும் உங்களைப் பாதுகாக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்