அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகள்! பிரித்தானியாவில் 39 வயது பெண்ணுக்கு நடந்த துயரம்: எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தாங்க முடியாத வலி காரணமாக சுய மருந்தை பயன்படுத்தி வந்த பெண்ணின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் Hull நகரைச் சேர்ந்தவர் Louise Waller. 39 வயதான இவர் வயிற்று வலிக்காக நான்கு மாதங்களுக்கு மேலாக தினந்தோறும் பாரசிட்டால் மாத்திரைகளை எடுத்து கொண்டு வந்துள்ளார்.

இதனால் அவரது கல்லீரல் செயலிழந்துவிட்டதால், கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.

இருப்பினும் அவரின் நிலை மோசமடைந்ததால், Hull Royal Infirmary மருத்துவமனையில் இருந்து Leeds General Infirmary மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

mirror.co.uk

அப்போது அவரது உடலின் குடல் மற்றும் அடிப்படை பெருங்குடல் அழற்சி காரணமாக செப்ஸிஸை உருவாக்கியுள்ளது. அது உடலில் இருக்கும் பல உறுப்புகள் செயலிழப்பதற்கு வழி வகுத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து Louise Waller கோமா நிலைக்கு சென்றார். அதன் பின் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை Hull Coroner's நீதிமன்றத்தில், அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் என்பது தெரியவந்தது. ஏனெனில் அவருக்கு மது குடி பழக்கம் இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி மனச்சோர்வு மற்றும் பதட்டதினாலும் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். Louise Waller-க்கு இரண்டு பிள்ளைகள், அதில் ஒரு மகன் 1999-ஆம் ஆண்டும், பின்னர் 2012-ஆம் ஆண்டு ஒரு மகளையும் பெற்றதாக கூறப்படுகிறது.

mirror.co.uk

திருமணம் முடிந்து தனது கணவருடன் 16 ஆண்டுகள் ஒன்றாக இருந்துள்ளார். அளவுக்கு மீறிய மதுப்பழக்கம் காரணமாக இவர்கள் பிரிந்துள்ளனர்.

அதன் பின் 2017-ஆம் ஆண்டு ஒருவரை சந்தித்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களின் வாழ்க்கை ஏற்றத் தாழ்வுடனே இருந்துள்ளது.

Louise Waller தன்னுடைய குடும்பத்தினருடன் சிக்கலான உறவை கொண்டிருந்ததால், கவலை மற்றும் மன அழுட்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் முடிவில் மூல நோயால் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி வலியால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் வலி மருத்து எடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

மருத்துவரான Laslo Karsai அவருக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்லார். அதில் அவரின் மரணத்திற்கு முக்கிய காரணம் உறுப்புகள் செயலிழப்பு, இது பாராசிட்டாமல் மாத்திரை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதன் விளைவு என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்