முன் பின் தெரியாத நபருடன் டேட்டிங் சென்ற பிரித்தானிய இளம்பெண்: கஞ்சா வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

முன் பின் தெரியாத நபர் ஒருவருடன் டேட்டிங் சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

லிவர்பூலைச் சேர்ந்த Derrin Crawford (23) ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்துவருகிறார்.

விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் Derrin, முன் பின் தெரியாத ஒருவருடன் டேட்டிங் சென்றுள்ளார்.

இரவு உணவுக்குப்பின் அந்த ஆணின் வீட்டுக்கு அவர் செல்ல, அங்கு வந்த பொலிசார், அந்த வீட்டில் கஞ்சா இருந்ததால் இருவரையும் கைது செய்துள்ளார்கள். பல நாட்கள் பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்ட Derrin, பிறகு சிறையிலடைக்கப்படுள்ளார்.

அவருக்கு இரத்தத்தில் போதைப் பொருள் உள்ளதா என்பதை அறியும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனையில் அவரது இரத்தத்தில் போதைப்பொருள் இல்லை என்றால், அவரை விடுவித்துவிடுவதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், சோதனை முடிவுகள் இரத்தத்தில் போதைப்பொருள் இல்லை என்று காட்டியபிறகும் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

பிரித்தானிய அதிகாரிகள் பிரச்சினையை தங்கள் கையில் எடுத்தும், உள்ளூர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக Derrinஐ சந்திக்க முடியவில்லை.

சிறையிலடைக்கப்பட்டுள்ள Derrinஐ யாரும் சந்திக்க அனுமதியளிக்கப்படாததால், சிறையில் வழங்கப்படும் ரொட்டி, ஜாம் தண்ணீருடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் போதைப்பொருட்கள் வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதால் கவலையிலாழ்ந்துள்ளனர் Derrin குடும்பத்தினர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்