லண்டனில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற 16 வயது சிறுமி தொடர்பில் அவசர கோரிக்கை! வெளியான அவர் புகைப்படம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் 16 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பில் அவசர தகவலை வெளியிட்டு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடக்கு லண்டனின் Barnet பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து Tierra Olive என்ற 16 வயது சிறுமி காணாமல் போயுள்ளார்.

அவர் எப்போது காணாமல் போனார் என்ற தகவலை பொலிசார் தெரிவிக்கவில்லை.

ஆனால் அவசர தகவலாக இதை வெளியிட்டுள்ள பொலிசார் Tierra Olive-ஐ கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவி வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதற்காக Tierra Olive-ன் தெளிவான புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Tierra-வை பார்த்து அவருடன் பேசியவர்கள் மற்றும் அவர் இப்போது எங்குள்ளார் என்பது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்