மொடலை காதலித்ததால் ஒரே நாளில் தெருவுக்கு வந்த கோடீஸ்வரர்: அம்மாவை நம்பி வாழும் பரிதாப நிலை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒரு காலத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த கோடீஸ்வரர் ஒருவரை ஒன்றுமில்லாதவராக்கியிருக்கின்றன அவரது விவாகரத்தும் காதலும்.

லண்டனில் லம்பார்கினி காரில் பயணித்து பிரித்தானியாவில் பெரிய பிஸினஸ்மேனாக திகழ்ந்தவர் Richard Rothschild (45).

அவரும் அவரது மனைவி Charmaine de Souza (46)ம் பல மில்லியன் டொலர்கள் மதிப்புடைய மாளிகை ஒன்றில் வாழ்ந்தவர்கள். 2016இல் இருவரும் பிரிந்தார்கள்.

அப்போது அவர்கள் தங்கியிருந்த அந்த வீடு இருவருக்கும் பாதிப்பாதி என நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருந்தார்.

இதற்கிடையில் Richard, Sherra என்ற பிளேபாய் மொடல் ஒருவரை காதலித்து, அவரை அந்த வீட்டிற்குள் அழைத்துவந்தார்.

இந்த விடயம் அவரது முன்னாள் மனைவிக்கு எரிச்சலூட்ட, நீதிமன்ற உத்தரவை மீறியதாக கணவரை சிறைக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினார் அவர்.

தொடர்ந்து நடந்துவந்த வழக்கில், அந்த வீட்டை Richardக்கே வழங்கிய நீதிபதி ஒருவர், மீதமுள்ள அனைத்தையும் Richardஇன் முன்னாள் மனைவி Charmaineக்கே கொடுத்துவிட்டார்.

தங்கள் பிஸினஸ் தன் தாயால் துவக்கப்பட்டது என்று கூறும் Richard, அங்கு ஒரு செகரட்டரியாக வந்தவர்தான் Charmaine என்கிறார்.

ஆனால், நீதிபதிகள் சொத்து பிரித்துக் கொடுத்ததில், வழக்கு செலவுக்கு 300,000 பவுண்டுகள், கடன் அடைத்தது என எல்லா செலவும் போக Richardஇடம் மீதமிருப்பது 23,938 பவுண்டுகள்.

Charmaineக்கு கிடைத்ததோ, 1,760,138 பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள். காதலாலும் விவாகரத்தாலும் எல்லாவற்றையும் இழந்து தற்போது தன் தாயின் வீட்டில் வாழ்ந்து வரும் Richard, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.

அவர்கள் 400,000 பவுண்டுகள் மதிப்புடைய எனது லம்பார்கினி காரை 95,000 பவுண்டுகளுக்கு விற்றார்கள் என்று கூறும் Richard, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நீங்கள் என் பொருட்களை விற்கலாம், ஆனால் என் சந்தோஷத்தை உங்களால் எடுத்துப்போட முடியாது.

நான் Sherraவை நேசிக்கிறேன், அவளைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்