லண்டனில் கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள் சில நிமிடங்களில் கொள்ளை! வெளியான முழுமையான தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் கோடிக்கணக்கில் மதிப்புடைய கடிகாரங்கள் வாகனத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளிவந்துள்ளது.

Cabot Watch நிறுவனத்தின் விலையுயர்ந்த கடிகாரங்கள் தனியார் டெலிவரி நிறுவனத்தின் வேனில் கடந்த ஜூன் 1ஆம் திகதி எடுத்து செல்லப்பட்டது.

அப்போது Cephas Street, Pemell Close பகுதிகளில் சென்ற போது யாரோ மர்ம நபர்கள் வேன் பின்பக்கத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காலை 10.05ல் இருந்து 10.25க்குள் தான் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

அந்த பெட்டிக்குள் அதிக மதிப்புள்ள மற்றும் அரிதான கடிகாரங்கள் மற்றும் வேறு சில பொருட்களும் இருந்துள்ளது.

அதன் மதிப்பு மொத்தமாக £300,000 இருக்கும் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ சாட்சிகள் இருந்தாலோ எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்