பிரித்தானியாவில் பரபரப்பான சாலையில் பொலிசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட பெண்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் கத்தியுடன் அச்சுறுத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அவரது உடலின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கத்தியுடன் பெண் ஒருவர் அச்சுறுத்தலில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு பொதுமக்களிடம் இருந்து தகவல் சென்றுள்ளது.

இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த மெர்செசைட் பொலிசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக குறித்த பெண்மணி மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

பொலிசார் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் குறித்த சம்பவம் நடந்து முடிந்தது என கூறும் அப்பகுதி மக்கள், பலருக்கும் அதன் பின்னணி தெரியவில்லை என்றே கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது, தற்போது அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்ததாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கவலைப்பட்ட டஜன் கணக்கான குடியிருப்பாளர்கள் இன்று பிற்பகல் அந்தப் பகுதியைச் சுற்றி தெருக்களில் நின்றிருந்தனர்.

விசாரணைக்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் பின்னர் தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்