லண்டனில் இருந்து நிரந்தரமாக வெளியேறும் பிரித்தானிய ராணியார்? வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்புவது இனி சந்தேகமே என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா சூழல் பிரித்தானியா ராணியாருக்கு சுமார் 18 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த முடிவு என்ற கருத்தும் கூறப்படுகிறது.

மேலும், நூற்றுக்கணக்கான அரண்மனை ஊழியர்கள் இந்த மாதத்துடன் தங்கள் பணியை இழக்க உள்ளதாகவும், அது சுமார் 250 எண்ணிக்கையை தொடலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி பால்மோரலில் அவரது கோடை விடுமுறைக்குப் பிறகு, ராணியார் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பாமல், ஊரடங்கு காலத்தில் தங்கியிருந்த வின்ட்சர் கோட்டைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

இதனாலையே, ராணியார் தலைநகருக்குத் திரும்புவாரா என்ற கேள்விகளை அது எழுப்புகிறது,

ஆனால் அரண்மனை உதவியாளர்கள் ராணியார் இனிமேல் வின்ட்சர் கோட்டையில் இருந்து மீண்டும் தமது கடமைகளைத் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ராணியாரும் இளவரசர் பிலிப்பும் மார்ச் மாதத்தில் இருந்தே தெரிவு செய்யப்பட்ட சிறப்பு ஊழியர்களால் வின்ட்சர் கோட்டையில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

12 ஊழியர்கள் கொண்ட இரு குழுக்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டு மூன்று வாரங்கள் வின்ட்சர் கோட்டையிலும், 3 வாரங்கள் அவர்கள் குடும்பத்தாருடன் என பகிர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இதில், ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரங்கள் தங்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதும், மூன்றாவது வாரம் சுய தனிமைப்படுத்தலுக்கு பின்னர் வின்ட்சர் கோட்டையில் பணிக்கு திரும்புகின்றனர்.

இருப்பினும், ராணியார் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இனி திரும்பப்போவதில்லை என்ற தகவல் 250 அரண்மனை ஊழியர்கள் வரை பணி நீக்கத்தை எதிர்கொள்ளக்கூடும் என்ற தகவல்களுடன் ஒத்துப்போவதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்