நீர் வீழ்ச்சியில் விளையாடிக்கொண்டிருந்த தாயும் குழந்தையும்... திடீரென அதிகரித்த நீரோட்டம்: பின்னர் நடந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது ஏழு வயது மகளுடன் நீர் வீழ்ச்சி ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த தாய் எதிர்பாராமல் மகளை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Freya Skene (7) தனது தாயான Brooke Reid (26)உடன் Dunkeld பகுதிக்கருகிலுள்ள நீர் வீழ்ச்சியின் ஏரிப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அதாவது, தண்ணீர் நீர் வீழ்ச்சியாக பாயும் இடத்திற்கு மேலே உள்ள ஏரியில். அப்போது திடீரென நீரோட்டம் அதிகரிக்க, இருவரும் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஏதாவது ஒரு பாறையை பிடித்துக்கொள்ள Brooke போராட, ஒரு கட்டத்தில் மகளைப் பிடித்திருந்த பிடி நழுவியுள்ளது.

இருவரும் அடித்துச் செல்லப்பட்டு, பாறைகளில் மோதி, நீர் வீழ்ச்சியிலிருந்து விழுந்து, தண்ணீருக்குள்ளிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், Freya ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.

சற்று முன் வரை தன்னுடைய கை பிடித்து விளையாடிய குழந்தை இப்போது இல்லை என்பதை நம்பமுடியாமல் திகைத்துப்போயிருக்கிறார் Brooke.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்