ஒரேயொரு நபரால் பிரித்தானியாவில் இந்திய உணவகம் உட்பட மூன்று இடங்கள் மூடப்பட்டது

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் Super Spreader என்னும் அதிகம்பேருக்கு கொரோனா பரப்பும் ஒருவரால், ஒரு இந்திய உணவகம், ஒரு மதுபான விடுதி மற்றும் ஒரு புகைபிடிக்கும் விடுதி ஆகியவை மூடப்பட்டன.

கொரோனா தொற்று கொண்ட ஒருவர் The Lighthouse Inn என்னும் மதுபான விடுதிக்கு சென்றுள்ளார்.

பின்னர் Vape Escape என்னும் புகைபிடிக்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அதே விடுதிக்கு உணவு விநியோகிக்கும் Saagar என்னும் உணவகத்தின் சாரதி ஒருவரும் சென்றுள்ளார்.

பின்னர் அந்த சாரதிக்கு கொரோனா தொற்று பரவியது தெரியவந்துள்ளது. ஆக, உணவகம் மற்றும் இரண்டு விடுதிகளும் மூடப்படுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

அத்துடன் அந்த விடுதிகள் மற்றும் உணவகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கட்டிடங்களும் கிருமிநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

Vape Escape மீண்டும் திறக்கப்பட்டுவிட்டாலும், Lighthouse Inn இன்னமும் திறக்கப்படவில்லை. இந்திய உணவகமான Saagar, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்