லண்டனின் முக்கிய சாலையில் திடீர் வெள்ளமா? தண்ணீருக்குள் சிக்கிய வாகன ஓட்டிகள்! நதி போல் காட்சி அளிக்கும் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தண்ணீர் குழாய் வெடிப்பு காரணமாக முக்கிய சாலையில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால், அப்பகுதி நதி போல் காட்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் North Circular சாலையில் இருக்கும் தண்ணீர் பைப் ஒன்று திடீரென்று உடைந்ததால், அதில் இருந்து தண்ணீ வெளியேறி, அப்பகுதி தண்ணீரால் நிரம்பி வழிந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக Hendon Way-வில் இருந்து Brent ஸ்ட்ரீட் வரை வெள்ளம் ஏற்பட்டதால்North Circular சாலை(A406) இரு திசைகளிலும் மூடப்பட்டது.

தண்ணீர் ஆபத்தான உயரத்திற்கு, வந்துவிட்டதால் குறித்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து பிற்பகல் 3.30 மணிக்கு தீயணைப்பு படைக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சாலையில் தண்ணீருக்குள் சிக்கியிருக்கும் வாகன ஓட்டிகளை மீட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களும், புகைப் படங்களும் சாலையின் சில பகுதிகள் முழுவதுமாக தண்ணீரில் நிரம்பி வழிவதை காட்டுகின்றன.

குறைந்தது இரண்டு வாகனங்கள் வண்டிப்பாதையில் சிக்கித் தவிக்கின்றன. இது ஒரு நதி போல தோற்றமளிக்கிறது.

தீயணைப்பு வீரர்கள் கார்களுக்குள் சிக்கியுள்ள வாகன ஓட்டிகளை மீட்டு வரும் நிலையில், தற்போது வரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் எந்த ஒரு காயமோ, அச்சமோ பட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திடீர் வெள்ளம் காரணமாக சாலையில் நீரின் உள்ளே பெரிய டிரக் மற்றும் விலையுயர்ந்த கார்கள் சிக்கியுள்ளன. இது முதல் முறையல்ல தெரியவில்லை எனவும், கடந்த 2018-ஆம் ஆண்டு இது போன்ற ஏற்பட்டதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆனால், அது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

Brent கிராஸ் இன்டர்சேஞ்சிற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, வாகன ஓட்டிகள் இப்பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது சரியாவதற்கு நீண்ட கால தாமதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்