லண்டனில் பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்: ஹீரோவாக கொண்டாடப்பட்ட இரு கட்டுமான தொழிலாளர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் பட்டப்பகலில் யூத மத குரு ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில், இரு கட்டுமான தொழிலாளர்கள் சமயோசிதமாக செயல்பட்டு ஆயுததாரியை மடக்கிப்பிடித்துள்ளனர்.

லண்டனில் Stoke Newington பகுதியில் பட்டப்பகலில் இந்த தாக்குதல் சம்பவம அரங்கேறியுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க யூத மத குரு Yaakov Schlesinger என்பவரே தாக்குதலுக்கு இரையானவர்.

இது தீவிரவாத தாக்குதல் அல்ல என குறிப்பிட்டுள்ள பொலிசார், மத வெறுப்பு காரணமாக நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு 40 வயதிருக்கும் எனவும், பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டே அந்த இரு கட்டுமான தொழிலாளர்களும் உயிர் குறித்த கவலை இன்றி, அந்த நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான அந்த யூத குருவானவருக்கு தலை மற்றும் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் ஆபத்தான கட்டத்தில் அவர் இல்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே கைதான நபர் உளவியல் பாதிப்பு கொண்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மத அடிப்படையிலான தாக்குதலாகவே இதை பார்ப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீவிரவாத தாக்குதலாக கருத எந்த முகாந்திரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்