லண்டனில் பட்டப்பகலில் நடந்த மோசமான சம்பவம்! அவமானகரமானது... கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில், இரண்டு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது அவமானகாரமானது என்று உள்துறை செயலாளர் பிரிதி படேல் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hackney-யில் இருக்கும் Frampton பூங்கா சாலையில், பொலிசார் ஒருவரை நபர் ஒருவர் கீழே தள்ளி தாக்குவது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

அதன் பின் இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது எனவும், தாக்குதல் எதற்கு நடந்தது என்பது தெரியவில்லை.

ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரி என இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அந்தளவில் காயம் இல்லை, இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 20 மற்றும் 38 வயது மதிக்கத்தக்க நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(Picture: Jam Press)

இந்த சம்பவம் குறித்து உள்துறை செயலாளர் Priti Patel தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் அதிர்ச்சி மற்றும் அவமானகரமானது. இது ஒரு அருவருப்பான வன்முறை தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் லண்டன் மேயல் Sadiq Khan, இரண்டு பெருநகர காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலை நான் முற்றிலும் கண்டிக்கிறேன். அவமானகரமானது.

குறித்த அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்து, பொதுமக்களுக்கு உதவினார்கள். நாங்கள் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

பொலிஸ் மீதான தாக்குதல்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. இதனால் இந்த சம்பவத்தை கண்டவர்கள் இது குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் கொடுக்கும் படி கூறியுள்ளார்.

பட்டப்பகலில் பொலிஸ் அதிகாரியையே குறித்த சிலர் தாக்கியுள்ளதால், மக்களின் நிலை என்ன என்பது குறித்து பலர் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

(Picture: Jam Press)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்