தனிமைப்படுத்தலா, அப்படியென்றால்... பிரித்தானியாவில் புதிய விதிகள் அமுல்படுத்தப்பட்டது தெரியாமலே வந்த பயணிகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு நேற்று முதல் புதிய விதிகள் அமுல்படுத்தப்பட்ட நிலையில், இனி ஏதோ எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தால், பிரித்தானியாவுக்குள் வந்தவர்கள் சொன்ன விடயம் எதிர்பார்ப்பையெல்லாம் காற்றடித்த பலூன் போலாக்கிவிட்டது.

சுவிட்சர்லாந்திலிருந்து வந்தார் ஒரு பயணி... நேராக ரயில் நிலயத்துக்கு போக புறப்பட்டார்.

என்ன விடயம் என்று கேட்டால், கொஞ்சம் உடம்பு சரியில்லை, ஹொஸ்பிட்டல் போகிறேன் என்றார்.

சரி, பிரித்தானியாவுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தவேண்டுமே தெரியாதா என்றால், தெரியாது என்றார்.

பொது சுகாதார பயணிகள் இருக்குமிடத்தை தெரிவிக்கும் படிவத்தை நிரப்பினீர்களா என்றால், அப்படி ஒரு படிவம் இருப்பதே தெரியாது என்றார்.

மற்றொரு பயணி கூறும்போது, பெரும்பாலான பயணிகள் அந்த ஒன்லைன் படிவத்தை நிரப்பவேயில்லை என்றார்.

ஆக, பிரித்தானியாவில் விதிகள் அமுல்படுத்தப்பட்டதென்னவோ உண்மைதான், ஆனால், அவை மற்ற நாடுகளை சரியாக சென்றடையவில்லை என்பது தெளிவாக புரிகிறது. மொத்தத்தில் புதிய விதிகளால் கடும் குழப்பம் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்நிலையில், பிரித்தானியவுக்குள் வரும் பயணிகள் மீது அபராதம் முதலான விடயங்களில் கடுமை காட்டவேண்டாம் என பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டதுபோல் தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்