பிரித்தானியாவில் கமெராவில் பதிவான காட்சிகள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் மக்களை அடிமைப்படுத்தி வியாபாரம் செய்து வந்த எட்வர்ட் கோல்ஸ்டன் என்பவரின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி நதியில் வீசிய வீடியோக் காட்சிகள் வெளியாகி கடந்த சில மணி நேரங்களாக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில், மின்னெபொலிஸ் பகுதியில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியதால், அந்த வீடியோவால் தற்போது உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஏனெனில் பொலிசார் தன்னுடைய முழங்காலை ஜார்ஜ் ப்ளாய்ட்டின் கழுத்தில் வைத்து நெரிக்கின்றார். இதனால் மூச்சுவிடமுடியாமல் சிரம்பப்படும் ஜார்ஜ் ப்ளாய்ட் பரிதாபமாக உயிரிழந்துவிடுகிறார்.

இதனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் என பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் இருப்பதால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும் ஆட்சியாளர்கள் தடுமாறி வருகின்றனர்.

ஆனால், ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் காலம் காலமாக தாங்கள் ஒடுக்கப்பட்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது குரல்களை வலிமையாக எழுப்பி வருகின்றனர்.

பிரித்தானியா, பிரேஸில், அவுஸ்திரேலியா, ஜப்பான் எனப் பல நாடுகளிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறத் துவங்கியுள்ளன.

பிரித்தானியாவில் ஒரு சில இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துவருவதால், பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தென்மேற்குப் பகுதியில் உள்ள பிரிஸ்டலில் போராட்டம் தீவிரமாக மாறியுள்ளது. இப்பகுதியில், அம்மக்களை அடிமைப்படுத்தி வியாபாரம் செய்து வந்த Edward Colston என்பவரின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்துநொறுக்கி, கயிறுகளைக் கட்டி சாலைகளில் இழுத்துச் சென்று அங்கிருந்த நதியில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17-ம் நூற்றாண்டில் உள்ளூரில் அடிமைகள் வர்த்தகத்தில் ஈடுபட்ட Edward Colston, இதன்மூலம் அதிக அளவில் லாபம் அடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

1895-ஆம் ஆண்டில் இவருடைய சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

போராட்டகாரர்களின் இந்தச் செயல்களால் அரசாங்க அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரிதி படேல், போராட்டக்காரர்களின் இந்தச் செயல் முற்றிலும் இழிவானது என்று விமர்சித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மக்கள் அமைதியான முறையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த உரிமை இல்லை.

போராட்டக்காரர்கள் சில குண்டர்களால் திசை திருப்பப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினரான சஜித் ஜாவித், நான் பிரிஸ்டலில் வளர்ந்தேன். அடிமைகள் வர்த்தகம் மூலமாக எட்வர்ட் கோல்ஸ்டன் லாபம் அடைந்ததைப் பற்றி எண்ணும்போது வெறுப்பு ஏற்படுகிறது.

ஆனால், இந்த மாதிரியான செயல்கள் சரியானது இல்லை. ஒரு நினைவுச் சின்னத்தை அகற்ற விரும்பினால், அது ஜனநாயக ரீதியில் இருக்க வேண்டும். இந்த மாதிரியான செயல்களால் அதை செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எட்வர்டின் சிலையை நதியில் எறிந்தவர்கள் பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்