பிரித்தானியாவில் மக்களுக்கு ஒரு விதி.. அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி..! போரிஸ் அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி

Report Print Basu in பிரித்தானியா
379Shares

பிரித்தானியா பிரதமர் தனது தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் பதவி விலகுவார் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் டிம் லௌடன் கூறினார்.

கம்மிங்ஸின் நடவடிக்கைகள் அரசாங்க ஆலோசனையை ஏன் மீறவில்லை என்பது குறித்து போரிஸ் ஜான்சன் சரியான நியாயத்தை வழங்குவார் என்று தான் நினைத்தேன்.

என்னால் இதை புரிந்துக்கொள்ள முடியவில்லை. மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், எனது தொகுதி வாக்களார்களும் இதை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார்.

இது மக்களுக்கு மிகவும் மோசமான செய்தியை அனுப்புகிறது. இது மக்களுக்கு ஒரு விதி மற்றும் எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி போல் தெரிகிறது, அது மிகவும் கவலையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

கொரோனா வைரஸ் தொடர்பான அரசின் செய்தியைத் திசைதிருப்பும் எதையும் எதிர்கொள்ள வேண்டும் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் டிம் லௌடன் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்