கொரோனாவால் வேலை வாய்ப்பில்லாத பிரபல உள்ளாடை மொடல்... இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
418Shares

கொரோனாவால் வேலை வாய்ப்பிழந்த பிரபல உள்ளாடை மொடல் ஒருவர் இப்போது பிழைப்பிற்காக பண்ணை ஒன்றில் காய்கறி பறிக்கும் வேலை செய்து வருகிறார்.

லண்டனில் வாழும் Aniko Michnyaova (32) பிரபல நிறுவனங்களின் உள்ளாடைகளுக்கு போஸ் கொடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த ஒரு மொடல் ஆவார்.

கொரோனாவால் வேலை வாய்ப்பில்லாததால் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கோரி விண்ணப்பித்துள்ளார் Aniko.

கடைசியாக அவருக்கு கிடைத்த வேலை, பண்ணை ஒன்றில் காய்கறிகளைப் பறித்து பார்சல் செய்யும் வேலை.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தான் ஒரு பிரபல மொடலாக பணிபுரிந்தவர் என்ற பெருமையெல்லாம் இல்லாமல், Aniko சாதாரணமாக தனது புதிய வேலையை மனதார செய்வதுதான்!

Credit: Triangle News

முன்பு ஒரு மணி நேரத்துக்கு 2,000 பவுண்டுகள் சம்பளம் வாங்கிய Aniko, இப்போது ஒரு மணி நேரத்துக்கு 8.72 பவுண்டுகள் சம்பளம் வாங்குகிறார்.

அதாவது ஒரு நாளைக்கு 2,000 பவுண்டுகள் சம்பளம் வாங்கியது போக, இப்போது, ஒரு மாதத்திற்கு 2,000 பவுண்டுகள் சம்பளம் வாங்குகிறார்.

ஒரு காலத்தில் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை அணிந்த நான், இப்போது குப்பை போடும் கவர்களை அணிந்துகொள்வது வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்று வேடிக்கையாக சிரிக்கிறார் அவர்.

முன்பு லண்டனில் மாதம் ஒன்றிற்கு 2000 பவுண்டுகள் வாடகையுள்ள ஆடம்பர மாளிகையில் தங்கிய Aniko, இன்று வாரம் ஒன்றிற்கு 57 பவுண்டுகள் வாடகைக்கு கேரவன் ஒன்றில் தன்னுடன் பணிபுரியும் ஐந்து பேருடன் தங்கியுள்ளார்.

முன்பெல்லாம் உணவை வீணாக்குவதைக் குறித்தெல்லாம் கவலைப்பட்டதில்லை, இப்போது உணவுத் தாவரங்களை நேரத்திற்கு பறிக்காவிட்டால் கூட அவை வீணாய்ப்போகும் என்பதை இந்த வேலைக்கு வந்தபின்புதான் அறிந்துகொண்டேன் என்கிறார் Aniko.

Credit: Triangle News
Credit: Triangle News

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்