விலங்குகளுக்கு உணவளிக்க வழியில்லை... 300 விலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ள உயிரியல் பூங்கா!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
352Shares

பிரித்தானிய விலங்குகளுக்கு உணவளிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த பூங்காவில் உள்ள 300 விலங்குகளை கருணைக்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளால் வேல்ஸிலுள்ள Borth Wild Animal Kingdom என்னும் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை நின்றுபோனது.

எனவே உயிரியல் பூங்காவுக்கு வருவாய் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அங்கிருக்கும் 300 விலங்குகளுக்கும் உணவளிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த உயிரியல் பூங்காவின் உரிமையாளர்களான Tracy மற்றும் Dean Tweedy ஆகியோர், தங்களுக்கு அரசு அளித்த உதவித்தொகையான 25,000 டொலர்கள் கிடைத்தது என்றும், ஆனால் அது சீக்கிரம் செலவழிந்து போனதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாரம் ஒன்றிற்கு விலங்குகளுக்கு உணவளிக்க 3,000 பவுண்டுகள் வரை தேவைப்படுவதாகவும், மீண்டும் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லையென்றால், விலங்குகளை கருணைக்கொலை செய்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

republicworld

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்