பிரித்தானியா அரசாங்கத்தை குற்றம் சாட்டி சிவில் சர்வீஸ் பதிவிட்ட உத்தியோகபூர்வ ட்வீட்! அமைச்சரவை அலுவலகம் தீவிர விசாரணை

Report Print Basu in பிரித்தானியா
223Shares

பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்தை குற்றம் சாட்டிய அங்கீகரிக்கப்படாத ட்வீட்’ உத்தியோகபூர்வ சிவில் சர்வீஸ் ட்விட்டர் கணக்கிலிருந்து எவ்வாறு பதிவிடப்பப்பட்டது என்பதை பிரித்தானியா அமைச்சரவை அலுவலகம் விசாரித்து வருகிறது.

தனது மூத்த ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸின் நடவடிக்கை குறித்து பிரதமர் ஜான்சன் பேட்டியளித்ததை அடுத்து பிரித்தானியா சிவில் சர்வீஸ் ட்விட்டர் பக்கத்தில் குறித்த பதிவு வெளியிடப்பட்டது

‘திமிர்பிடித்த மற்றும் அவமதிப்பானது’. இந்த உண்மை திரிப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்? என உத்தியோகபூர் சிவில் சர்வீஸ் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது

சிறிது நேரத்தில் ட்வீட் நீக்கப்பட்டாலும் அதன் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரலாகியது.

ட்வீட்டைத் தூண்டியது என்ன என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஜான்சன் தனது மூத்த ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸின் நடவடிக்கைகளை ஆதரித்த பின்னர் சிவில் சர்வீஸ் ட்விட்டில் ஜான்சன் தான் மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளார் என பலரும் ஊகித்துள்ளனர்.

ஜான்சனின் மூத்த ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ், ஊரடங்கு விதிகளை மீறி லண்டனில் உள்ள அவரது வீட்டிலிருந்து 402 கிலோமீட்டர் டர்ஹாமிற்குப் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கம்மிங்ஸ் விதிகளை மீறவில்லை என ஜான்சன் அவரது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்