பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தொட்டது!

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000-க்கும் மேல் எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் பாதிக்கபப்ட்டோரின் எண்ணிக்கை சற்று முன் வரை 17,089-ஆக உள்ளது.

இந்நிலையில் நேற்று வரை மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 759-ஆக இருந்த நிலையில், ஒரு நாளில் 260-பேர் உயிரிழந்துள்ளதால், அதன் எண்ணிக்கை தற்போது 1,019-ஐ எட்டியுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

இந்த வாரத்தில் இளவரசர் சார்லஸ், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் சுகாதார துறை செயலாளர் Matt Hancock ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்