லண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார்! போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் உள்ள விடுதியில் பயத்துடன் இருக்கும் தனது மகளை மீட்க முடியுமா என்று பிரபல திரைப்பட இயக்குனர் கவலையாகக் கேட்டுள்ளனர்.

பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை சபிதா ஜெயராஜ். இவர்களுக்கு தனு என்ற மகளும் கேசவ் என்ற மகனும் உள்ளனர்.

ஜெயராஜ் தமிழில், வின்சென்ட் அசோகன், நவ்யா நாயர், வினீத் நடித்த 'சில நேரங்களில்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகானின் ஆரம்பித்த இந்த வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த வைரஸ் இப்போது பிரித்தானியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இளவரசர் சார்லஸைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டனில் இருக்கும் தனது மகளை மீட்க முடியுமா? என்று கேட்டுள்ளார் இயக்குனர் ஜெயராஜ். அவரது மகள் தனு, உயர்படிப்புக்காக அங்கு சென்றுள்ளார்.

இதுபற்றி ஜெயராஜ் கூறுகையில், நான் நேற்று கூட தனுவிடம் போனில் பேசினேன். அவளுடன் விடுதியில் இருந்தவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். வெறும் நான்கு மாணவர்கள் மட்டுமே உடன் இருக்கிறார்கள்.

என் மகள் மொத்தமாக பயத்தில் இருக்கிறார். அவரை இப்போது மீட்க முடியுமா?. அனைவரும் இந்த சமயத்தில் பத்திரமாக இருங்கள் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்