கொரோனா அச்சத்தின் நடுவிலும் மருத்துவமனைக்கு பணிக்கு புறப்பட்ட இளம்பெண்: தெருவே கூடி செய்த நெகிழ்ச்சி செயல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய நகர் ஒன்றைச் சேர்ந்த ஆம்புலன்சில் பணிபுரியும் ஒரு இளம்பெண், கொரோனா அச்சத்தின் மத்தியிலும் பணிக்கு புறப்பட்ட நிலையில், அவரது தெரு மக்கள் அனைவரும் இணைந்து அவரை நெகிழவைக்கும் ஒரு செயலைச் செய்தனர்.

Basingstoke நகரைச் சேர்ந்தவரான Ali (55) என்ற பெண்ணின் மகள் Tayla Porter (22).

அவசர சேவை உதவியாளராக பணியாற்றும் தன் மகள் கொரோனா அச்சத்தின் மத்தியிலும் தளராமல் பணியாற்றுவதைக் கண்ட Ali, தன் மகளை கௌரவிக்க முடிவு செய்தார்.

அதன்படி, அக்கம்பக்கத்தவர்களிடம் பேசி, அனைவருமாக Taylaவுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தனர்.

Tayla வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வர, தங்கள் வீடுகள் முன் கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், Ali தன் பக்கத்து வீடுகள் ஒன்றிரண்டு பேருக்குத்தான் இந்த திட்டம் குறித்து தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர்கள் குறுஞ்செய்திகள் அனுப்பியும் ஒருவருக்கொருவர் தகவல் சொல்லியும், மொத்த தெருவும் Taylaவை கௌரவிக்க கூடியிருக்கிறது.

தனது காரின்மீது Cadbury's Miniature Heroes என்ற சாக்லேட்டும் கேக் ஒன்றும் இருப்பதை கவனித்த Tayla காரை நோக்கி வர, அவர் எதிர்பாராத நேரத்தில் மக்கள் கரவொலி எழுப்ப, ஒரு பக்கம் நாணம் மறுபக்கம் நெகிழ்ச்சி என கண்களில் வழியும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தபடி காரில் ஏறி புறப்பட்டார் அவர்.

அவர் அடுத்த தெருவுக்கு செல்லும் வரை மக்கள் நின்று கரவொலி எழுப்பி அவரை உற்சாகப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்