பிரித்தானியாவில் வந்த மாற்றம்... வெளிநாட்டினர் இதை நிரூபிக்க வேண்டும்! கலங்கும் முதியவர்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தற்போது குடியுரிமையை நிரூபிக்க அரசு கூறியுள்ளதால், ஏழைகள் பலரும் இதில் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இத்தாலியை சேர்ந்த 95 வயது முதியவர் இது குறித்து கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா சமீபத்தில் வெளியேறிய பின் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன் அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் வசித்துவரும் மற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களைத் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

இதனால், ஏழைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பலரும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலியை சேர்ந்த ஆன்டோனியோ என்பவர் கடந்த 1952-ல் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது வரை இவர் இங்கே தான் வாழ்ந்து வருகிறார்.

அரசின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய அவர், நான் முதன் முதலில் இங்கிலாந்திற்கு வந்தபோது என்னிடம் கொடுக்கப்பட்ட வெளிநாட்டினர் சான்றிதழை இன்னும் வைத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய வங்கிக் கணக்குகளைத் தான் மீண்டும் கேட்கின்றனர் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மனைவியையும், மகனையும் இழந்த ஆன்டோனியோ தன்னுடைய பேரக்குழந்தைகளுடன் தற்போது வசித்து வருவதால், இந்த முதுமைக்கு பின் நான் எங்கு சென்று அலைவது என்று தெரிவித்துள்ளார்.

ஆன்டோனியோ குறித்து சமூக ஆர்வலர் டிமிட்ரி ஸ்கார்லடோ கூறுகையில், அவர் 70 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 40 ஆண்டுகளாக இங்கு பணியாற்றியுள்ளார்.

ஆனால், இவரை இப்போது குடியுரிமையை நிரூபிப்பது ஒரு சுமையைப்போல முன் நிற்கிறது. இந்த விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தப் பிரச்னை ஆன்டோனியோவிற்கு மட்டுமல்ல, அவரைப் போல பல முதியவர்கள், ஏழை எளியமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 70 வருடங்களாக இந்த நாட்டில் வசித்து வரும் ஆன்டோனியோவுக்குக் குடியுரிமையை நிரூபிக்கும் நிர்பந்தம் இருப்பதைப் பார்க்கும்போது, இந்த அரசாங்கம் வெளிநாட்டினரை எப்படிஅணுகுகிறது என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும், ஆன்டோனியோ முகாமிற்கு வந்துள்ளதால் எங்களைப் போன்ற தன்னார்வலர்களின் உதவியைப் பெற முடிகிறது. எந்தப் பட்டியலிலும் பெயர் இல்லாதவர்கள், தனியாக வசிப்பவர்கள் அல்லது பல்வேறு பாதிப்பிற்கு உள்ளானவர்கள் எங்கே செல்வார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இதற்கு முக்கிய காரணம், அரசாங்க தரவுகளை டிஜிட்டலைஸ் செய்யப்படாதது தான் என்று கூறப்படுகிறது.

பிரித்தானிய எம்.பி ஆல்பெர்டோ காஸ்டா, இந்தப் பிரச்னை குறித்து தொடர்ந்து மற்ற உறுப்பினர்களுடன் விவாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

75 சதவீத வெளிநாட்டினருக்கு ஏற்கெனவே குடியுரிமை ஆவணங்கள் கிடைத்துவிட்டது. மீதமிருக்கும் 25 சதவீத மக்களைதான் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறோம் என்று இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்