பெரும் சோதனையில் பிரித்தானிய அரச குடும்பம்: ஒரே வாரத்தில் இரண்டு விவாகரத்து!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
568Shares

பிரித்தானிய இளவரசி மார்கரெட்டின் மகன் டேவிட் ஆம்ஸ்ட்ராங்-ஜோன்ஸ் மற்றும் அவரது மனைவி விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

25 வருடங்களுக்கும் மேல் தம்பதியினராக வாழ்ந்து வந்த ராணியின் மருமகனும் அவரது மனைவி செரீனாவும் தற்போது பிரிந்து செல்லவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தம்பதியரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், டேவிட் மற்றும் செரீனா இருவரும் தங்களது திருமணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அவர்கள் விவாகரத்து செய்ய இணக்கமாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பத்திரிகைகள் தங்கள் தனியுரிமையையும் அவர்களது குடும்பத்தினரையும் மதிக்க வேண்டும் என்று தம்பதியினர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

12 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பீட்டர் பிலிப்ஸ் மற்றும் மனைவி Autumn ஆகியோர், 6 நாட்களுக்கு முன்பு விவாகரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.

பாலியல் குற்றவாளியுடனான இளவரசர் ஆண்ட்ருவின் தொடர்பு, ஹரி-மேகன் அரச பணிகளில் இருந்து விலகியது என அடுத்தடுத்து அரச குடும்பத்திற்கு பெரும் சோதனை நிலவி வரும் நிலையில், தற்போது 2 ஜோடிகள் விவாகரத்து பற்றி அறிவித்திருப்பது ராணிக்கு மிகவும் கசப்பான சம்பவமாக இருக்கலாம் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்