பணத்தை வாரி இறைத்து விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய பெண்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
285Shares

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கொண்டாடும் விதமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிகப்பெரிய விருந்தளித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த 29 வயதான எம்மா பருவா என்பவர், தனது முன்னாள் காதலன் அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய செல்ல உதவுவதற்காக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி இருவரும் ஜூலை 2017 அன்று திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் அவர்களுடைய வாழ்க்கை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால், 16 மாதங்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.

தம்பதியினர் 2018 நவம்பரில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

விவாகரத்து முடிக்கப்பட்டபோது, கிழக்கு சசெக்ஸின் பிரைட்டனைச் சேர்ந்த எம்மா, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக ஒரு மிகப்பெரிய விருந்து விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.

500 பவுண்ட் செலவில் அவர் ஏற்பாடு செய்த விருந்தில், நண்பர்கள், உறவினர்கள் என அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர். அதில் அவருடைய புதிய காதலன் பியூ ஆங்கஸும் (38) கலந்துகொண்டிருந்துள்ளார்.

இதுகுறித்து எம்மா கூறுகையில், திருமணம் முறிந்ததை நினைத்து சோகத்துடன் இருக்க விரும்பவில்லை. நான் வருத்தத்துடன் இருப்பதை மக்கள் பார்க்க வேண்டும் விரும்பவில்லை. மாறாக மகிழ்ச்சியாக அதனை கொண்டாட விரும்பினேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்