20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை: 13 வாரங்களில் விடை கொடுக்க நேர்ந்த சோகம்: மனதை நொறுக்கும் அந்த புகைப்படம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
374Shares

பிரித்தானியப் பெண் ஒருவர் 20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தைக்கு 13 வாரங்களில் விடைகொடுக்க வேண்டி வந்த நிலையில், கடைசியாக தன் மகனை நெஞ்சோடு அணைத்துக் கதறும் மனதை உருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நார்போல்க்கைச் சேர்ந்த Tammy Ireson (39), ஒரு ஆண் பிள்ளைக்காக 20 ஆண்டுகள் காத்திருந்தார்.

அவர் ஆசைப்பட்டது போலவே, ஆண் குழந்தை ஒன்றும் உருவானது. என்றாலும் அதற்கு பல பிரச்சனைகள் இருந்தன.

ஒரு நாள் அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தான் குட்டி Wilber. தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த Wilberக்கு திடீரென ஒரு நாள் மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் அவனது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பிறந்து 13 வாரங்களே ஆன நிலையில், எவ்வளவோ முயன்றும் Wilberஐக் காப்பாற்ற இயலாததால், அவனுக்கு அளிக்கப்பட்டுவந்த செயற்கை சுவாசத்தை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதுவரை தன் குழந்தையை சுமந்துகொண்டு தீவிர சிகிச்சைப்பிரிவை விட்டு வேளியேவே வராத நிலையில், முதன்முறையாக தனது குழந்தையை கைகளில் ஏந்தியபடி, நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மருத்துவமனை வராந்தாவிலேயே நடக்க ஆரம்பித்தார் Tammy.

ஆனால், இது தன் மகனை சுமக்கும் முதல் முறை மட்டுமல்ல, கடைசி முறையும் இதுதான் என்பது நினைவுக்கு வரவும், கண்ணீர் பீறிட்டு வர, கதறியழ ஆரம்பித்தார் அவர்.

அதை அவரது கணவர் தனது மொபைலில் கிளிக் செய்ய, அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போதே பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை இனி இல்லை என்னும் ஒரு தாயின் மன வேதனையை தெளிவாகக் காணமுடிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்