பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்த பிரித்தானிய அரச குடும்ப உத்தியோகப்பூர்வ வலைத்தளம்!

Report Print Arbin Arbin in பிரித்தானியா
762Shares

பிரித்தானிய அரச குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் சீனாவின் பிரபல ஆபாச தளத்தின் இணைப்பு பிரசுரிக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இளவரசர் ஹரியின் ஆதரவில் செயல்படும் தொண்டு நிறுவன பக்கத்திற்கு பதிலாகவே சீனாவின் ஆபாச தளத்திற்கான இணைப்பு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட குறித்த தொண்டு நிறுவனமானது தென்னாப்பிரிக்க இராச்சியமான லெசோதோவில் 'நீடித்த, நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தொண்டு நிறுவனத்திற்கு 2004-ல் இருந்து புரவலராக எவரும் நியமிக்கப்படாத நிலையில், உரிய உறுப்பினர்களை கலந்தாலோசித்த பின்னர் 2007 ஆம் ஆண்டு இளவரசர் ஹரி அந்த தொண்டு நிறுவனத்தின் புரவலராக நியமிக்கப்பட்டார்.

தற்போது Dolen Cymru என்ற குறித்த தொண்டு நிறுவன பக்கத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய அரச குடும்பத்து உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளனர்.

இதுவே தவறுதலாக சீனா ஆபாச வலைத்தள இணைப்புடன் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அரண்மனை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரைகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்