பிரித்தானியா எம்.பி-க்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு! விமான நிலையத்தில் நேர்ந்த கதி

Report Print Basu in பிரித்தானியா
239Shares

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரித்தானியா எம்.பி. டெப்பி ஆபிரகாம்ஸ் இந்தியாவுக்குள் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினரும், காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான டெபி ஆபிரகாம்ஸ், இந்தியாவுக்குள் நுழைய மறுக்கப்பட்டுள்ளதாகவும், தனது இ-விசா நிராகரிக்கப்பட்டதாக டெல்லி விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் நாடு கடத்தப்படுவதற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

காஷ்மீர் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் முடிவுகளை டெபி ஆபிரகாம்ஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 8.50 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்ததாக திருமதி ஆபிரகாம்ஸ் கூறினார். கடந்த அக்டோபரில் வழங்கப்பட்ட இ-விசா மற்றும் 2020 அக்டோபர் வரை செல்லுபடியாகும் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

எல்லோரையும் போல் நானும் எனது இ-விசா உள்ளிட்ட ஆவணங்களுடன் குடிவரவு மேசையில் முன்வைத்தேன், புகைப்படம் எடுக்கப்பட்டேன், பின்னர் அந்த அதிகாரி தனது திரையைப் பார்த்து தலையை அசைத்தார்.

பின்னர் அவர் என் விசா நிராகரிக்கப்பட்டது என கூறிவிட்டு எனது பாஸ்போர்ட்டுன் எங்கேயோ சென்றார்.

10 நிமிடங்களுக்கு பின் திரும்பி வந்தபோது அவர் மிகவும் முரட்டுத்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தார், என்னுடன் வாருங்கள் என்று என்னிடம் கத்தினார் என பிரித்தானியா எம்.பி. அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

என்னிடம் அப்படி பேச வேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன், பின்னர் நாடுகடத்தப்படுபவர் செல் எனக் குறிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

பின்னர் அவர் என்னை உட்காரும்படி கட்டளையிட்டார், நான் மறுத்துவிட்டேன். அவர்கள் என்ன செய்வார்கள் அல்லது வேறு எங்கு என்னை அழைத்து செல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

எனவே, என்ன நடக்கிறது என்பதை அறிய என் உறவினரை அழைத்தேன், அவர் பிரித்தானியா உயர் ஆணையத்தை தொடர்புக்கொள்ள முயற்சி மேற்கொண்டார்.

எனவே இப்போது நான் நாடு கடத்தப்படுவதற்கு காத்திருக்கிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தப்பட்டேன் என்ற உண்மையை ஏற்க நான் தயாராக இருக்கிறேன், என் குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்க இந்திய அரசாங்கம் என்னை அனுமதிப்பார்கள் என்று நம்புவதாக ஆபிரகாம்ஸ் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்