புயலில் சிக்கி.. பிரித்தானியாவில் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் தத்தளித்த பயணிகள் விமானம்! திகிலூட்டும் காட்சி

Report Print Basu in பிரித்தானியா
1197Shares

பிரித்தானியாவில் டென்னிஸ் புயல் காரணமாக எத்திஹாட் விமானம் தரையிறங்க முடியாமல் கற்றில் தத்தளித்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

டென்னிஸ் புயல் காரணமாக சனிக்கிழமையன்று பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானச் சேவை நிறுத்தப்பட்டது. 230 க்கும் மேற்பட்ட விமானங்களை ஈஸிஜெட் நிறுவனம் ரத்து செய்தது.

இங்கிலாந்தின் சில பகுதிகளில், ஒரு மாதத்திற்கும் மேலான மழை வெறும் இரண்டு நாட்களில் பெய்துள்ளது.

இதனால் சுற்றுச்சூழல் நிறுவனம் பிரித்தானியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான வெள்ள எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

கார்டிஃப் அருகிலுள்ள நாண்ட்கர்வ் கிராமம், ரோண்ட்டா சைனான் டாஃப் பிரித்தானியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற எட்டிஹாட் விமானம் படி ஓடுபாதைக்கு மேல் புயல் கற்றில் தத்தளித்த திகிலூட்டும் காட்சி வைரலாகியுள்ளது.

எனினும், இறுதியில் விமானி திறமையாக ஓடுபாதையில் தரையிறக்கி பயணிகளுக்கு நிம்மதியளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்